Tuesday, 25 November 2014

இஞ்ஜினியரிங்

இன்றைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கனவுப் படிப்பு

எல்லாப் பள்ளிகளையும் போலவே எங்கள் பள்ளியிலும் பொறியியல் படிப்பிற்கான வழிகாட்டுதல் வகுப்பு நடந்தது.

என்ன நடக்கிறது என்று பார்ப்போமே என்று கலந்து கொண்டேன்.

நான் எதிர்பார்த்தது :

இஞ்ஜினியரிங் ல்

  என பல பிரிவுகள் உண்டு

இதில் என்னென்ன பிரிவுகளில் எது சார்ந்த படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன ? அவற்றின் பயன்பாடுகள் , அவை எந்த வகையில் நமக்கு உதவும்? அவற்றின் அவசியம், வருங்காலத் தேவைகள், எந்தக் கல்லூரியில் சிறந்த கல்வித்திட்டமும் பாடத்திட்டமும் உள்ளது?  போன்ற தகவல்கள் தரப்படும் என்று எதிர்பார்த்துச் சென்றேன்.

ஆனால் அங்கு நடந்தது:

இஞ்ஜினியரிங் எந்த கல்லூரியில் படித்தால் கேம்பஸ் இண்டர்வியூ உள்ளது?

எந்த இஞ்ஜினியரிங் படித்தால் என்ன சம்பளத்தில் வேலை கிடைக்கும்?

எந்த இஞ்ஜினியரிங் சம்பளம் அதிகம்?

நுழைவுத்தேர்வுக்கு எந்த  அகாடமியில் படித்தால் செலவு குறைவாக இருக்கும்?( அவர்களிடம் தான் படிக்கணுமாமாமாமாம்)

இப்படி பணம் ....பணம்.....பணம்.....என்று பணம் சம்பந்தமாகவே ஓடியது அந்த வழிகாட்டுதல்(?????!!!!!!) வகுப்பு

இன்றைய சமுதாயத்தினர் அனைவரும் பணம் சார்ந்தே யோசித்து , பணம் சார்ந்தே நின்று, பணம் சார்ந்தே நடந்து பணம் சார்ந்தே செயல்படுகின்றனர்

அதில் பள்ளி மாணவர்களும் விதிவிலக்கல்ல

ஆனால் இது TOOOOOOO MUCH வாகவே என் மனதிற்குப் பட்டது.

நான் எதிர்பார்த்த எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

அதெற்கென அம்மாவிடம் பெற்று வந்து கட்டிய தொகையான 200 ம் மகா வீண்.

அடடா.!.என்னையும் பணம் பற்றி சிந்திக்க வைத்து விட்டார்களே....???                                        


                                  

No comments:

Post a Comment