Wednesday 22 October 2014

தமிழ் படும் பாடு

 1.” கத்தியின்றி ரத்தமின்றி ” ____ என்ற பாடலை எழுதியவர் யார்?

நாமக்கல் கவிஞர் என்று நான்காம் வகுப்பிலேயே படித்து விட்டேன்

.( இந்த விஷயம் நாலாப்பு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ் எடுத்த ஆசிரியருக்கு ஏனோ தெரியவில்லை).

பாரதியார் என்று என்னிடம் பலமாக வாதாடினார்.கண்ணை மூடிக் கொண்டு சூரியனை காணவே இல்லை என்று சொல்பவரிடம் சண்டைக்கா போக முடியும்? நான் ஒருவேளை மீண்டும் வலியுறுத்திச் சொன்னால் என் மதிப்பெண் குறைக்கப்படலாம். அல்லது மாணவர்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்படலாம்.( அட அவங்களுக்கும் தான் தெரியலையே....இந்தம்மா சொல்றது தான் வேதம்னு நினைச்சாங்க)

2. ”அயோத்திதாசர் சென்னையில் உள்ள மக்கிமா நகரில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் பிறந்தார். ...” இது பத்தாம் வகுப்புத் துணைப்பாடத்தில் உள்ள வரிகள்..( பக்கம் 213)
இதனை என் தமிழ் அம்மா விளக்கி 1845 ஆம் ஆண்டு மே மாதம் திங்கட்கிழமை பிறந்தார் என்று கூறினார்...

(அய்யோ...அய்யோ....!!)

எனக்குச் சிரிப்பு தாங்க வில்லை...

அது எந்தத் திங்கள் கிழமை அம்மா ? மாதத்தில் 4 திங்கள் உள்ளதே? என்று நக்கலாகத்தான் கேட்டேன்.

வெறும் திங்கள் என்று தந்தால் அது முதல் திங்களாகத்தான் இருக்கும் என்று விளக்கம் வேறு தந்தார்.

3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்...   குலசேகர ஆழ்வார் எழுதிய “மீன் நோக்கும் நீள்வயல் சூழ்...” என்று தொடங்கும் பாடல் அவர்களிடம் பட்ட பாடு இருக்கிறதே.... அடடா...அடடா...

மீன்கள் வயலுக்கு கிணற்றிலிருந்து பம்பு செட்டு மூலமா வந்து இறைவனை வேண்டும். அதுதான் வித்துவக் கோட்டையின் சிறப்பு ..என்று அந்த அர்த்தத்தைக் கொன்று விட்டார்....

குல சேகர ஆழ்வார் காலத்தில் ஏதுங்க பம்பு செட்டு?

பாடலின் அர்த்தம் கூட கீழே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.... ஆனால் அதனைக்கூடத் தெளிவாகச் சொல்லாமல்..போனார் அந்தத் தமிழ் அம்மா...

குறைந்த கூலிக்குக் கிடைக்கிறார்கள் என்று ஏதோ படித்தவர்களை , தமிழில் சிறிதும் ஆர்வம் இல்லாதவர்களைத் தான் நிர்வாகம் நியமித்துள்ளது...

அய்யோ...... சரியான விளக்கத்தை சொல்லலாமே என்று நான் என் சக மாணவிகளுக்கு விளக்க....அவர்களோ என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அதனை ஏற்கத் தயாராய் இல்லை.

இப்படித்தான் ”””டமில்”””””” ஆசிரியர்களிடம் நம் தமிழ் படாதபாடு படுகிறது...இவர்களிடம் படித்தால் தமிழ் எப்படி வளரும்???

பாரதியார் தான் என் நினைவில் வந்தார்..”மெல்லத் தமிழ் இனி......????????”


No comments:

Post a Comment