தீபாவளி முதலே மழை மிகத் தீவிரமாக பெய்யத்தொடங்கிவிட்டது. வெள்ளி வரைக்கும் கல்லூரி இருந்தது. சனிக் கிழமை மழையின் தீவிரம் அதிகமானதால் விடுமுறை என்று அறிவித்து விட்டார்கள். என் போன்றவர்கள் பெருத்த கவலையில் ஆழ்ந்து விட்டோம். அண்ணா பல்கலைக் கழகக் கலந்தாய்வு மிகவும் தாமதமாக நடந்ததாலும் கடைசி வரை எங்கள் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து கொண்டே இருந்ததாலும் செப்டம்பர் மாதம் தான் பாடங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு மதிப்பீட்டுத் தேர்வு முடிந்திருந்த நிலையில் மூன்றாவது நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பல்கலைக்கழகத் தேர்வு...இந்தத் தேர்வை நான் மிகவும் ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் மழையின் கோரத்தாண்டவம்...
நாங்கள் வசிக்கும் பகுதியானவேளச்சேரி....ஏரி...எங்கள் வீடு எல்லாம் ஏரியைச் சேர்ந்தது தான் என்று நான் கேள்விப்பட்ட போது அதிர்ச்சியானேன்.
பால் , காய்கறி என்று எந்த உணவுப் பொருளும் கிடைக்க வில்லை.
ஆனால் அருகாமையில் இருந்த கடைகளில் அன்று பாலின் விலை 20 ரூபாய் ஆவின் நைஸ் விலை 40, உருளைக்கிழங்கு ரூபாய் 58, முட்டைக் கோஸ் ஒன்றின் விலை 55, கேரட் 78, பீட்ரூட்80, தக்காளி 140, கீரை சாதாரணமாக ரூபாய் 15 அல்லது 10க்குக் கிடைக்கும் அன்று 40. கேட்கவே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்
மழையில் சாலை வழியாக பயணமான வண்டிகளில் சில சாலை பள்ளங்களில் தடுமாறி விழுந்தனர். அவர்களைத் தூக்கி விட்டு வண்டியை எடுத்துத் தந்து 300 முதல் 500 வரை பணம் பெற்றனர்.
அரசியல் வாதிகள் தான் மக்களை ஏமாற்றுவார்கள் என்ற என்எண்ணத்தில் தீ இல்லை. எரிமலையே வெடித்தது.அன்று தான். ஆளாளுக்கு என்னென்ன வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த வழிகளில் பணம் சம்பாதித்தனர்.
இன்னும் நான் சொன்னால், இப்படியெல்லாமா நடந்தது என்று நீங்கள் உங்கள் மூக்கில் மட்டுமல்ல , பக்கத்து வீட்டுக்காரர் மூக்கின் மேலும் விரல் வைப்பீர்கள்
மூன்று நாட்களாய் மின்சாரம் இல்லை. எனவே எங்கள் செல்பேசி இணைப்புகளில் இருந்த சார்ஜ் முற்றிலுமாகக் கரைந்தது. பவர் பேங்க் என்று சொல்லப்படும் சார்ஜர்களில் சார்ஜ் ஏற்றி, அதனை 50க்கும் 100க்கும் விற்றனர். மக்களும் வெளியூர்களில் வசிக்கும் தங்கள் குடும்பத்தாரோடு பேச அதனை விலைக் கொடுத்து வாங்கி உபயோகித்தனர்.
உதவி என்று இருக்கும் செயல்கள் அனைத்தும் அன்று வியாபாரமாக்கப்பட்டது கண்டு எனக்குத் தலை சுற்றியது.
தரை தளத்தில் இருந்தோர் ஒரு சிலர் காலி பண்ணி பாதுகாப்பு இடங்களுக்குச் சென்றனர். அப்படி பாதுகாப்பு கருதி வேறு வீட்டுக்குச் சென்றவர்களின் வீடு பக்கத்தில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தண்ணியை அடுத்தவர்கள் சுற்றுச் சுவர்களுக்குள் கொட்டினர். ( இதை பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.)
வழக்கம் போல் மீன் பிடிக்கும் சிறுவன் மனம் கொண்ட பெரியவர்கள் தங்கள் குழம்புகள் கொதிக்க வைக்க மீன்பிடித்து விளையாடினர்.( கொண்டாடினர்.)
யாரும் யாருக்கும் அடிப்படையில் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வில்லை என்பதே என் கணிப்பாக இருந்தது.
பெரிய மலைப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? கற்றவர்கள் யார்? எனக்கு அழுகை வந்தது. என் மக்கள் இப்படி இருப்பது என்னால் தாங்க இயலவில்லை. இந்தப் பதினேழு வயதில் என்னால் என்ன செய்ய இயலும் என்ற இயலாமையில் தவித்தேன். இது தண்ணீரில் தத்தளித்த மக்களை விட என் மனது தத்தளித்த சோகம் தான் அதிகம்..
அரசு தான் இந்தப் பகுதியை நிலமாக்கி விற்றுள்ளது. பின்நாளில் கரையோரம் மிகவும் குறுகலாக்கப்பட்டுள்ளது குடிசை போட்ட மக்களால். அவர்களும் பட்டா போட்ட பிறகு விற்று இருக்கின்றனர்.
( இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்துக் கொண்டுள்ளார்கள்..மின்சாரம் அரை மணிநேரம் மட்டும் தரப்படும் என்று சொல்லி, சரியான பின் முழுவதுமாக தரப்படும் என்று சொல்லிச் சென்றுள்ளனர்..ஆனால் பால் விலை 30 ரூபாயாகக் குறைந்தது. காய்கறி விலை அதே தான்...)
எல்லோரும் தப்பு பண்ணா அரசாங்கத்துக் கிட்ட சொல்லணும்...அது சரி..
அரசாங்கமே தப்பு பண்ணா??????!!!!!!
( நான் போட்டுள்ள ஆச்சர்யக் குறியும் கேள்விக்குறியும் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் போடும் ஆச்சர்யக்குறி அல்ல)
யார் மாற வேண்டும்?
*************************************************************************

No comments:
Post a Comment