Sunday 5 October 2014

தவறான பாடம்

      பிளஸ் 2 வில் nuclear physics  என்ற  தலைப்பில் ஒரு பாடம் உள்ளது அதில் radio carbon dating என்ற உப தலைப்பில் carbon  இன் half life period வேதியியல் பாடத்தில் 5700 years என்றும் இயற்பியல் பாடத்தில் 5570 என்றும் எழுதப்பட்டிருக்கிறது

 . ஒரு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன் . அவர் physics தேர்வுக்கு அப்படி எழுது chemistry தேர்வுக்கு இப்படி எழுது என்று சொன்னார் .

        இதாவது பரவாயில்லை .தமிழில் உவமைக்கவிஞர்  சுரதா வை வாழும் கவிஞர் என்றே எழுதச்  சொல்கிறார்கள் .

இதனைக்  கல்வித்துறை கவனிக்காதா? தவறானதை இவ்வளவு காலம் ஆசிரியர்கள் எப்படி ஏற்று நடத்துகிறார்கள் ? மாணவர்களுக்கு  குழப்பம் ஏற்படாதா ? பிறகெப்படி நாங்கள் உணர்ந்து படிப்பது?அதுவும் பொதுத்தேர்வில் இப்படியா?


 தவறானதைத் தான் நாங்கள் படிக்க வேண்டுமா ?இப்படி தவறானதை த் தான் திருத்துவார்களா ? எங்களுக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக முக்கியமானதல்லவா?

 இதை விடக் கொடுமை என்ன வென்றால் physics பா டத்தில் 5,9,10 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. ஏனென்றால் ஒரு கேள்வி மட்டுமே அதிலிருந்து கேட்கப்படும். எனவே அதற்கு முக்கியத்துவம் இல்லை.

 ஆனால் அந்தப் பாடம் தான் ECEஇஞ்சினியரிங் ல் மிகவும் முக்கியம் .பிறகெப்படி நாங்கள் கல்லூரி வகுப்புகளில் மிளிர்வோம் ? இவர்களே எங்களை இப்படி நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?இதற்கு யாரேனும் முயற்சி எடுத்து மாற்ற மாட்டார்களா ?

இப்படிக்கு படிக்க விரும்பும் மாணவி

No comments:

Post a Comment