Monday, 19 October 2015
Friday, 2 October 2015
திருவிழாவாம் திருவிழா
திருவிழாவாம்...திருவிழா
பதிவர்களின் திருவிழா
புதுக்கோட்டையில் ஒருவிழா
பூப்பூக்கும் பெருவிழா
பதிவர் சேரும் ஒருவிழா
பாசம் உள்ள நம்விழா
வலை தளங்கள் இயக்குவோர்
வருகை தரும் பெரும் விழா
பதின்னொன்று வாருங்கள்
பண்பாடு சிறக்கட்டும்
அக்டோபர் வாருங்கள்
அன்பு கூடி பெருகிடும்
கணினியிலே புரட்சியாம்
காண ஓடி வாருங்கள்
கலைஞர்கள் கூடிடும்
கண்ணான ஒரு விழா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு பொட்டுப் படிக்கலாம்
நிலவன் அய்யா இருக்கிறார்
நீங்கள் ஓடி வாருங்கள்
கரந்தைமாமா அழைக்கிறார்
காணஓடி வாருங்கள்
தனபாலன். கூப்பிட
தயக்கமின்றி வாருங்கள்
அழகான ஒரு விழா
அன்பு காட்டும் பெருவிழா
நமது வீரம் காட்டுவோம்
நாளும் இதனைக் கூட்டுவோம்
வருக வருக வருகவே
சக்தி பாப்பா அழைக்கிறார்
*********************************************************************************
( சின்னப்பிள்ளையில் படித்த மாம்பழமாம் மாம்பழம் பாட்டு மெட்டில் படியுங்கள்...என்ன இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு என்று நீங்கள் சொன்னால்?????????
நான் சின்ன புள்ள தாங்க சின்னப் புள்ளத் தனமா தான் கூப்புடுவேன்...)
அய்...நானும் எழுதிட்டே....நானும் எழுதிட்டேன்...நானும் எழுதிட்டேன்...
நானும் தாதா தான்..நானும் தாதா தான்....ஹா.....ஹா....
Subscribe to:
Posts (Atom)