Showing posts with label வகுப்பு. Show all posts
Showing posts with label வகுப்பு. Show all posts

Thursday, 27 November 2014

பாதித்த சம்பவம்



                                                                                                          என் பள்ளியில் மிக மிகத் தீவிரமாக தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரமது:

ஒரு மாணவி வகுப்பில் அழுது கொண்டிருந்தாள்....நாங்கள் கணினி பயிற்சிக்கு சென்று வந்திருந்தோம்.

அவளிடம் காரணம் கேட்டோம்

அழுகையினூடே அவள் தெரிவித்தது.

சில காலமாக ஒரு மாணவன் அவளை தொந்தரவு செய்துள்ளான்

தொந்தரவு என்றால் எப்போதும் அவளைப் பார்ப்பது, வகுப்புக்கு வெளியே செல்லும் போது கூடவே வருவது, டியூஷன் செல்லும் போது கூடவே வருவது போன்றவை.

அவளுக்கு அது மன உளைச்சலைத் தந்ததால் இனி பொறுக்க வேண்டாம் என்று பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளாள்

புகார் கொடுத்து விட்டு வரும் போது இவளைப் பார்த்து எங்கே போனாய் என்று கேட்டுள்ளான்

இவள்அதிர்ச்சியுடன் ஏதும் பேச வாய் எடுக்குமுன்......நீ பிரின்சிபால் மிஸ்ட்ட என்னைப் பத்தி புகார் சொன்னியா என்று சற்று சத்தமாகக் கேட்க இதற்குள் பயிற்சிக்குச் சென்ற அனைவரும் வகுப்பறைக்குள் நுழைய....இவன் காட்டுக் கத்தலாய்....”ஆமாண்டி. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்...என்ன செய்வ?” என்று கேட்டிருக்கிறான்.

மாணவர்களில் பலர் இப்படிக் கேட்ட மாணவனை விட்டு விட்டு இவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இவள் அதை நினைத்து குடம் குடமாக அழுது கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ ஏதோ சினிமாவில் காட்டுவது போல அன்று முழுவதும் மிகவும் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.. ( இத்தனைக்கும் அவனை அவள் கடுமையாகத் திட்டியிருந்தாள்)

அந்தப் பெண்ணின் அழுகை முகத்தில் நான் பார்த்தது

1. இந்த நிகழ்வு எப்படி மற்றவர்கள் முன் எடுத்துக் கொள்ளப்படும்?

2. இவளின் பெற்றோர் அவனை விட்டுவிட்டு இவளைத்தானே திட்டுவார்களா?


                             

Sunday, 5 October 2014

தவறான பாடம்

      பிளஸ் 2 வில் nuclear physics  என்ற  தலைப்பில் ஒரு பாடம் உள்ளது அதில் radio carbon dating என்ற உப தலைப்பில் carbon  இன் half life period வேதியியல் பாடத்தில் 5700 years என்றும் இயற்பியல் பாடத்தில் 5570 என்றும் எழுதப்பட்டிருக்கிறது

 . ஒரு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன் . அவர் physics தேர்வுக்கு அப்படி எழுது chemistry தேர்வுக்கு இப்படி எழுது என்று சொன்னார் .

        இதாவது பரவாயில்லை .தமிழில் உவமைக்கவிஞர்  சுரதா வை வாழும் கவிஞர் என்றே எழுதச்  சொல்கிறார்கள் .

இதனைக்  கல்வித்துறை கவனிக்காதா? தவறானதை இவ்வளவு காலம் ஆசிரியர்கள் எப்படி ஏற்று நடத்துகிறார்கள் ? மாணவர்களுக்கு  குழப்பம் ஏற்படாதா ? பிறகெப்படி நாங்கள் உணர்ந்து படிப்பது?அதுவும் பொதுத்தேர்வில் இப்படியா?


 தவறானதைத் தான் நாங்கள் படிக்க வேண்டுமா ?இப்படி தவறானதை த் தான் திருத்துவார்களா ? எங்களுக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக முக்கியமானதல்லவா?

 இதை விடக் கொடுமை என்ன வென்றால் physics பா டத்தில் 5,9,10 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. ஏனென்றால் ஒரு கேள்வி மட்டுமே அதிலிருந்து கேட்கப்படும். எனவே அதற்கு முக்கியத்துவம் இல்லை.

 ஆனால் அந்தப் பாடம் தான் ECEஇஞ்சினியரிங் ல் மிகவும் முக்கியம் .பிறகெப்படி நாங்கள் கல்லூரி வகுப்புகளில் மிளிர்வோம் ? இவர்களே எங்களை இப்படி நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?இதற்கு யாரேனும் முயற்சி எடுத்து மாற்ற மாட்டார்களா ?

இப்படிக்கு படிக்க விரும்பும் மாணவி

Sunday, 21 September 2014

தேர்வு நினைவுகள்

போன வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக அதிகாலை எழுந்து பள்ளிக்குக் கிளம்பும் முன் என் அம்மாவின் ஆசை முத்தங்களை வாங்கிக் கொண்டுஅம்மாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றோம்.

தேர்வறை திறக்கப்படும் வரை வாசலில் காத்திருந்து என்னை வழியனுப்பிச் சென்றாள் அம்மா...அம்மாவின் முகத்தைப் பார்த்துவிட்டு தேர்வு எழுத் போனதில் அலாதி அன்பும் பிரியமும்...தேர்வு நாட்களில் என் தோழிகள் எதையோ பற்றி மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார்கள்...புதர் தலை, கல் பெஞ்ச் என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் காதில் விழுந்தது...அதைக் கேட்க ஆர்வம் எழுந்ததில்லை..

அறிவியல் தேர்வு வீடு வந்த அன்று அம்மா என்னிடம் சொன்னார்...பள்ளியில் ஒரு பையனும் பெண்ணும் ( வேறு பள்ளியில் இருந்து தேர்வு எழுத வந்தவர்கள்) அருகருகே கல்பெஞ்ச் ஓரத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்ததாகவும் வந்திருந்த அனைத்து ப் பெற்றோர்களும் அருவருப்பாகவும், பிடிக்காமல் பார்த்ததாகவும் கூறினார்....( additional information)  அவன் தலை புதர் போலவும் இருந்ததாம். என் தோழிகள் பேசிக்கொண்டதற்கு ஓரளவு க்கு அர்த்தம் புரிந்தது.

.கடைசித் தேர்வன்று என்னிடம் கூப்பிட்டுக் காண்பித்தார் அம்மா.. இந்த உலகம் மறந்து அப்படி அளவளாவிக் கொண்டுருந்தார்கள்.. எனக்கே சந்தேகம் வந்தது...அவர்கள் தேர்வில் தேறுவார்களோ என்று....கொஞ்சம் அருவருப்பாகவும் இருந்தது.அம்மாவிடம் அங்கே பார்க்காமல் போய் வேலைக்குப் போற வேலையைப் பாருங்கம்மா என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டுப் போனேன். வழக்கம் போல் ஒரு புன்னகையோடு என்னைவிட்டு அகன்று போனார்.

அவர்கள் வீட்டில் எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பார்கள்? அவர்கள் பெற்றோர்களுக்கு இது தெரியுமா தெரியாதா? பல கேள்விகள் தான் என்னுள்...

இந்த வயதில் இதெல்லாம் தோன்ற யார் காரணம்?  ஊடகங்களா?....

உன்னால் முடியும் தம்பியில் ஒரு பாடல்....அக்கம் பாருடா சின்ன ராசா...ஆகாசப்பார்வை என்ன சின்ன ராசா......ஞாபகம் வந்தது.....